191. பெருவேளூர் (மணக்கால் ஐயம்பேட்டை)

இது தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் 209வது ஸ்தலமாகும், சோழ நாட்டில் காவேரி நதியின் தெற்கு கரையில் அமைந்த 92வது ஸ்தலமாகும். 

இறைவன்: அபிமுக்தீஸ்வரர், பிரியாஈஸ்வரர்.  

இறைவி: அபின்னாம்பிகை, ஏலவார்குழலி.

கோச்செங்கட் சோழனின் திருப்பணியாலான மாடக்கோயில். திருஞான சம்பந்தர் தலையாலங்காடு சென்று இறைவனை தரிசித்த பின்பு, இத்தலம் வந்தடைந்தார்.   தேவ அசுரர்கள் பாற்கடலை கடைந்து அமுதம் எடுத்த போது, அது அசுரர்களின் கையில் கிடைக்காமல் செய்ய பெருமாள் மோகினி அவதாரம் எடுத்தார். இவர் தனது அவதார நோக்கம் நிறைவேறிய பின், மீண்டும் தனது ஆண் உருவத்தை பெறுவதற்காக இத்தலத்து இறைவனை வேண்டினார் என தல வரலாறு கூறுகிறது. 






அண்ணாவும் கழுக்குன்றும் ஆயமலை யவைவாழ்வார்
வின்னோரும் மண்ணோரும் வியந்தேத்த அருள்செய்வார்
கண்ணவார் உலகுக்குக் கருத்தானார் புரமெரித்த
பெண்ணாணாம் பெருமானார் பெருவேளூர் பிரியாரே.
- திருஞானசம்பந்தர்

மறையணி நாவினானை மறப்பிலார் மனத்து ளானைக்
கறையணி கண்டன் றன்னைக் கனலெறி யாடி னானைப்
பிறையணி சடையி னானைப் பெருவே ளூர்பேணி னானை
நறையணி மலர்கள் தூவி நாள்தொரும் வணங்கு வேனே.
- திருநாவுக்கரசர்

கருத்துகள்