இது தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் 208வது ஸ்தலமாகும், சோழ நாட்டில் காவேரி நதியின் தெற்கு கரையில் அமைந்த 91வது ஸ்தலமாகும்.
இறைவன்: கரவீரநாதர், பிரம்மபுரீஸ்வரர்.
இறைவி: பிரத்தியட்சமின்னம்மை, பிரத்யக்ஷ நாயகி.
கௌதமர் பூசித்த இத்தலம் திருக்கண்ணமங்கை பெருமாள் கோயிலோடு இணைந்த கோயிலாகும். திருஞான சம்பந்தர் தலையாலங்காடு சென்று இறைவனை தரிசித்த பின்பு, இத்தலம் வந்த போது இருட்டிவிட்டதால், இரவு தங்கி மறு நாள் இறைவனை பாடியுள்ளார்.
அரியு நம்வினை உள்ளன ஆசற வரிகொள் மாமணி போற்கண்டம் கரிய வன்திக ழும்கர வீரத்தெம் பெரிய வன்கழல் பேணவே.
- திருஞானசம்பந்தர்
கருத்துகள்