இது தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் 206வது ஸ்தலமாகும், சோழ நாட்டில் காவேரி நதியின் தெற்கு கரையில் அமைந்த 89வது ஸ்தலமாகும்.
இறைவி: பஞ்சின் மெல்லடியம்மை.
உன்னை விட்டு எப்போதும் பிரியமாட்டேன்" என்று உறுதி மொழி கொடுத்து சங்கிலி நாச்சியாரை திருவொற்றியூரில் திருமணம் செய்து கொளிகிறார் சுந்தரர். நாட்கள் செல்லச் செல்ல, திடீரென அவருக்கு முதல் துணைவியான பரவை நாச்சியார் நினைவுக்கு வந்தவுடன் திருவாரூர் புறப்படுகிறார். சங்கிலி நாச்சியாருக்கு செய்து கொடுத்த உறுதி மொழியை மீறியதால் சுந்தரரின் பார்வை பறிபோனது. மனம் கலங்கிய சுந்தரர் பார்வை வேண்டி ஒவ்வொரு சிவத்தலங்களாக சென்று, மீண்டும் பார்வை தந்தருளும்படி வேண்டினார். காஞ்சிபுரம் வந்தபோது காமாட்சியின் கருணையால் ஏகாம்பரேஸ்வரர் சுந்தரருக்கு இடது கண் பார்வை மட்டும் தந்தருளினார். மீண்டும் அவர் பல சிவத்தலங்களை தரிசித்து திருவாரூர் வந்து மற்றொரு கண்ணுக்கு பார்வை தந்தருளும்படி வேண்டினார். இவரது வேண்டுதலை ஏற்ற இறைவன், "இத்தலத்தில் அக்னி மூலையில் உள்ள குளத்தில் நீராடி தன்னை வணங்கினால் வலது கண் பார்வை கிடைக்கும்" என்றருளினார். சுந்தரரும் அதன்படி செய்து வலது கண் பார்வை பெற்றார்.
தூவாயா தொண்டுசெய் வார்படு துக்கங்கள் காவாயா கண்டுகொண் டாரைவர் காக்கிலும் நாவாயால் உன்னையே நல்லன சொல்லுவேற்(கு) ஆவாஎன் பரவையுண் மண்டளி அம்மானே
- சுந்தரர்



கருத்துகள்