197. திருவேட்டக்குடி

இது 166வது தேவார பாடல் பெற்ற சிவ தலம் மற்றும்  சோழநாட்டில் காவிரி ஆற்றின் தென்கரையில் உள்ள மற்றும் 49வது தலமாகும்.

இறைவன்:  திருமேனி அழகர், சுந்தரேஸ்வரர்.
இறைவி:  சௌந்தரநாயகி, சாந்தநாயகி.



குருஷேத்ர போரில் வெல்ல பாசுபத அஸ்திரத்தைப் பெறுவதற்காக அர்ஜுனன் ஒரு மூங்கில் காட்டில் சிவபெருமானை நோக்கி தவம் செய்தான். அப்பொழுது, காட்டு பன்றி ஒன்று வேகமாக அர்ஜுனனை நோக்கி ஓடி வந்தது. அர்ஜுனன் அதைக் கண்டு தனது வில்லிலிருந்து  ஒரு அம்பெய்தினான். அதே சமயத்தில் சிவனும் பார்வதியும் வேடுவ  வடிவத்தை எடுத்து காட்டிற்கு வந்தனர். பன்றியைக் கண்டதும், சிவனும் பன்றியின் மீது அம்பை எய்தார். சிவனும் அர்ஜுனனும் தங்கள் அம்பு பன்றியை மட்டுமே கொன்றதாகக் கூறினர், இதனால் அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் ஒருவர் மீது மற்றொருவர் தாக்கிக் கொண்டனர். அப்பொழுது அர்ஜுனனின் வில் உடைந்தது. கோபமடைந்த அர்ஜுனன் தனது உடைந்த வில்லால் சிவனை அடித்தார். இந்த அடியை நான்கு லோகங்களிலும் உள்ள அனைவரும் உணர்ந்தனர். சிவன் தனது காலால் அவரை உதைத்தார், அர்ஜுனன் இந்த கோவிலின் தீர்த்தத்தில் விழுந்தார். இதனால் பார்வதி அர்ஜுனன் மீது கோபமடைந்தார். சிவன் பார்வதியை சமாதானப்படுத்தி அர்ஜுனனை பசுபத அஸ்திரத்தால் ஆசீர்வதித்தார். இன்றும் மூலவரின் மீது அடிபட்ட வடு காணப்படுகிறது. 





வண்டிரைக்கும் மலர்க்கொன்றை விரிசடை மேல் வரியரவம்
கண்டிரைக்கும் பிறைச்சென்னிக் கபாலி கனைகழைகள்
தொண்டிரைத்துத் தொழுதிறைஞ்சத் துளங்குஒளி நீர்ச் சுடர்ப்பவளம்
தெண்டிரைக்கண் கொணர்ந்தெறியும் திருவேட்டக் குடியாரே.
- திருஞானசம்பந்தர்

கருத்துகள்