இது 169வது தேவார பாடல் பெற்ற சிவ தலம் மற்றும் சோழநாட்டில் காவிரி ஆற்றின் தென்கரையில் உள்ள மற்றும் 52வது தலமாகும்.
இறைவன்: தர்ப்பாரண்யேஸ்வரர்.
இறைவி: பிராணம்பிகை, போகமார்த்த பூன்முலையாள்.
இது, நளன் பூஜித்தக் காரணத்தால், நள்ளாறு எனப்படுகிறது. இத்தலம் தியாகராஜருக்குரிய சப்தவிடங்கத் தலங்களில் ஒன்றாகும். இங்குள்ள தியாகராஜர் தகவிடங்கர் எனப்படுகிறார். அவர் ஆடும் நடனம் உன்மத்த நடனம் எனப்படும்.
இடம் இறைவன் நடனம்
திருவாரூர் விதி விடங்கர் அஜபா நடனம்
திருநள்ளாறு நாக விடங்கர் உன்மத்த நடனம்
நாகப்பட்டினம் சுந்தர விடங்கர் விசி நடனம்
திருக்கரையில் ஆதி விடங்கர் குகுட நடனம்
திருக்குவளை ஆவணி விடங்கர் பிருங்க நடனம்
திருவாய்மூர் நில விடங்கர் கமல நடனம்
வேதாரண்யம் புவனி விடங்கர் ஹம்ச பாத நடனம்
போகமார்த்த பூண் முலையாள் தன்னோடும் பொன்னகலம் பாகமார்த்த பைங் கண் வெள்ளேற்றண்ணல் பரமேட்டி ஆகமார்த்த தோலுடையன் கோவண ஆடையின் மேல் நாகமார்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே.
- திருஞானசம்பந்தர்
குலங்கொடுத்துக் கோள்நீக்க வல்லான் தன்னைக் குலவரையின் மடப்பாவை இடப் பாலானை மலங் கொடுத்து மாதீர்த்தம் ஆட்டிக்கொண்ட மறையவனைப் பிறைதவழ் செஞ்சடையினானைச் சலங் கொடுத்துத் தயாமூல தன்ம மென்னுந் தத்துவத்தின் வழிநின்று தாழந்தோர்க்கெல்லாம் நலங் கொடுக்கும் நம்பியை நள்ளாற்றானை நானடியேன் நினைக்கப்பெற்றுய்ந்த வாறே.
- திருநாவுக்கரசர்
பூவில் வாசத்தைப் பொன்னினை மணியைப் புவியைக் காற்றினைப் புனல்அனல் வெளியைச் சேவின் மேல்வருஞ் செல்வனைச் சிவனைத் தேவ தேவனைத் தித்திக்குந் தேனைக் காவி யங்கண்ணிப் பங்கனைக் கங்கைச் சடைய னைக்கா மரத்திசை பாட நாவில் ஊறும்நள் ளாறனை அமுதை நாயி னேன்மறந் தென்நினைக் கேனே.
- சுந்தரர்
கருத்துகள்