201. தேவூர்

இது 202வது தேவார பாடல் பெற்ற சிவ தலம் மற்றும்  சோழநாட்டில் காவிரி ஆற்றின் தென்கரையில் உள்ள மற்றும் 85வது தலமாகும்.  

இறைவன்:  தேவபுரீசுவரர், தேவகுருநாதர், கதலிவனேசர்.

இறைவி:  மதுரபாஷினி, தேன்மொழியம்மை.









ராவணன் குபேரனுடன் போரிட்டு குபேரனுடைய சங்கநிதி, பதுமநிதி என்ற அமிர்த கலசங்களை எடுத்துச் சென்றான். குபேர ஸ்தானத்தை இழந்த குபேரன் தேவூர் தலத்து இறைவனை செந்தாமரைப் புஷ்பங்களால் அர்ச்சித்து வழிபட்டதால் குபேர கலசங்களைத் திரும்பப் பெற்று மீண்டும் குபேர பட்டத்தைப் பெற்றான். 

இந்திரன் விருத்தாசுரனைக் கொன்ற பாவத்திற்கு இந்திர பட்டத்தை இழந்தபோது, இத்தலத்து இறைவனை வணங்கி சாபம் நீங்கப் பெற்று மீண்டும் இந்திர பட்டத்தைப் பெற்றான். 
பண்ணிலாவிய மொழியுமை பங்கன்எம் பெருமான்
விண்ணில் வானவர் கோன்விம லன்விடை யூர்தி
தெண்ணி லாமதி தவழ்தரு மாளிகைத் தேவூர்
அண்ணல் சேவடி யடைந்தனம் அல்லல்ஒன் றிலமே.
- திருஞானசம்பந்தர்

கருத்துகள்