தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் 237 ஆவது தலமும், சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 120ஆவது சிவத்தலமாகும்.
இறைவன் : நடுத்தறியப்பர், நடுத்தறிநாதர்.
சைவ சமயத்தைச் சார்ந்த பெண் ஒருத்தி வைணவன் ஒருவனுக்கு மனைவியானாள். புகுந்த வீட்டில் மாமியார் வீட்டார் காணாதவாறு சிவலிங்க வழிபாடு செய்து வந்தாள். அவள் கணவன் அதுகண்டு மனைவி வழிபாடு செய்து வந்த அந்த லிங்கத்தைக் கிணற்றில் எறிந்து விட்டான். அப்பெண் வேறுவழியின்றி வீட்டின் பின்புறம் கன்று கட்டியிருந்த தறியையே (ஆப்பு) சிவபெருமானாகப் பாவித்து வழிபட்டு வந்தாள். ஒரு நாள் கணவன் அதையும் கண்டு, கோபித்து அம்முளையைக் கோடரியால் வெட்ட இறைவன் வெளிப்பட்டு அருள்புரிந்த தலம். (கன்று + ஆப்பு + ஊர் = கன்றாப்பூர்). இந்த லிங்கத்திருமேனி சுயம்பு மூர்த்தியாகத் தோன்றினாலும் தறியிலிருந்து தோன்றியதால் இறைவன் நடுத்தறிநாதர் எனப்பட்டார். அந்த கன்றுக்குட்டியின் நடுதறி இருந்த இடமே இன்று நடுத்தறிநாதர் கோயிலாக விளங்குகின்றது. மூல லிங்கத்தின் பாணப் பகுதியில் வெட்டுப்பட்ட தழும்பு உள்ளதைக் காணலாம்.
மாமதியோர் கூறுகந்தாய் மறைகொள் நாவா மதிசூடி வானவர்கள் தங்கட் கெல்லாம் நாதனே யென்று பரவி நாளும் நைஞ்சுருகி வஞகமற் றன்பு கூர்ந்து வாதனையால் முப்பொழுதும் பூநீர் கொண்டு வைகல் மறவாது வாழ்த்தி யேந்திக் காதன்மையால் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.
- திருநாவுக்கரசர்


கருத்துகள்