206. அன்பிலாலந்துறை (அன்பில்)

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில்  111 ஆவது தலமும், சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் 57ஆவது சிவத்தலமாகும். 

இறைவன் :  சத்தியவாகீஸ்வரர், பிரமபுரீஸ்வரர், ஆலந்துறையார்.  

இறைவி :  சௌந்தரநாயகி.









ஒரு முறை திருஞானசம்பந்தர் கொள்ளிடத்தின் வடகரையில் அமைந்துள்ள இத்தலத்தை தரிசிக்க வந்தபோது கொள்ளிட நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது. சம்பந்தரால் கோவிலை நெருங்க முடியவில்லை. தூரத்தில் நின்ற படியே சுயம்புவாய் அருள்பாலிக்கும் சிவபெருமானைப் பாடினார். காற்றில் கலந்து வந்த ஒலி ஓரளவே கோயிலை எட்டியது. ஞானசம்பந்தரின் பாட்டை நன்கு கேட்பதற்காக விநாயகர் தன் யானைக்காதை பாட்டு வந்த திசை நோக்கி சாய்த்து கேட்டு ரசித்தார். ஒரு காலை மடக்கி, இன்னொரு காலை குத்துக்காலிட்டு அமர்ந்து விநாயகர் பாட்டை ரசித்த ஒரு சிற்பி அக்காட்சியை சிற்பமாக வடித்தார். 
கணைநீடெரி மாலர வம்வரை வில்லா
இணையாஎயில் மூன்றும் எரித்த இறைவர்
பிணைமாமயி1 லுங்குயில் சேர்மட அன்னம்
அணையும்பொழில் அன்பிலா லந்துறை யாரே.
- திருஞானசம்பந்தர்

வானஞ் சேர்மதி சூடிய மைந்தனை
நீநெஞ் சேகெடு வாய்நினை கிற்கிலை
ஆனஞ் சாடியை அன்பிலா லந்துறைக்
கோனெஞ் செல்வனைக் கூறிட கிற்றியே.
- திருநாவுக்கரசர்

கருத்துகள்