தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் 159 ஆவது தலமும், சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 42ஆவது சிவத்தலமாகும்.
இறைவன் : சொர்ணபுரீஸ்வரர், தேவப்பிரியர்,சுவர்ணலட்சுமீசர், செம்பொன்பாள்ளியார்.
இறைவி: மருவார்குழலி, புஷ்பாளகி, தாக்ஷாயணி, சுகுந்தகுந்தளாம்பிகை, சுகந்தவனநாயகி.
பிரம்மாவின் மானச புத்திரராகக் கருதப்படும் தட்சன் தன் மகள் தட்சாயிணியை சிவபெருமானுக்கு மணமுடித்து வைக்கிறார் . ஆனால் தன் அகந்தையால் தான் நடத்தும் யாகத்திற்கு சிவனை அழைக்கவில்லை. இதனால் தக்ஷன் சிவனின் ஆளாக நேரிடுகிறது. தாட்சயினியும் சிவனின் வார்த்தையை மீறி தன் தந்தையை சமாதானப்படுத்தி, சிவனை யாகத்திற்கு அழைக்கும்படி கூற, தட்சன் மறுத்துவிடுகிறான். தட்சாயிணியும் கோபத்தில் தக்ஷனின் யாகத்தை அழிய சாபம் இடுகிறார்.
சிவபெருமான் வீரபத்திரர் மற்றும் பத்திரகாளி மூர்த்திகளை தோற்றுவித்து யாகத்தை அழித்து தக்ஷனையும் அழித்தார். தாட்சாயிணி சிவநிந்தை செய்த தட்சனின் மகள் என்ற பாவம் தீர வேண்டி இத்தலத்தில் பஞ்சாக்னி மத்தியில் கடும் தவம் புரிகிறார். சிவபெருமான் தாட்சாயிணியை மன்னித்து மருவார் குழலியம்மை என்னும் திருநாமத்துடன் இத்தலத்தில் என்னருகில் இருந்து அருளாட்சி செய் என்று அருள்பாலிக்கிறார். இத்தலம் தாட்சாயணிக்கு அருள்புரிந்ததும், வீரபத்திரர் தோன்றியதுமாகிய சிறப்பினையுடையது.
மருவார் குழலி மாதோர் பாகமாய்த் திருவார் செம்பொன் பள்ளி மேவிய கருவார் கண்டத்து ஈசன் கழல்களை மருவா தவர்மேல் மன்னும் பாவமே.
- திருஞானசம்பந்தர்
ஞாலமும் அறிய வேண்டில் நன்றென வாழ லுற்றீர் காலமும் கழிய லான கள்ளத்தை ஒழிய கில்லீர் கோலமும் வேண்டா ஆர்வச் செற்றங்கள் குரோத நீக்கில் சீலமும் நோன்பும் ஆவார் திருச்செம்பொன் பள்ளி யாரே.
- திருநாவுக்கரசர்


கருத்துகள்