211. திருப்பறியலூர் (பரசலூர்)

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில்  158 ஆவது தலமும், சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 41ஆவது சிவத்தலமாகும். 

இறைவன் :   வீரட்டேஸ்வரர், தக்ஷபுரீஸ்வரர். 
 
இறைவி: இளங் கொம்பனையாள்.





சிவபெருமானின் வீரம் வெளிப்பட்ட எட்டு தலங்களில் முக்கியமான தலம் திருப்பறியலூர்.
  1. திருவதிகை
  2. திருக்கோவலூர்
  3. திருக்குறுக்கை
  4. திருக்கண்டியூர்
  5. திருப்பறியலூர்
  6. திருக்கடவூர்
  7. திருவிற்குடி
  8. திருவழுவூர் 
சிவபெருமானின் மனைவியான தாட்சாயினியின் தந்தை தட்சன் மிகச்சிறந்த விஷ்ணு பக்தன். அவனுக்கு வரம் அளித்த சிவன் என்றும் கூட மதியாமல் அவருக்குரிய அவிர்பாகத்தையும் தான் நடத்தும் யாகத்தில் தராமல் ஆணவத்துடன் நடந்து கொண்டான் தட்சன்.  தட்சன் நடத்தும் யாகத்திற்கு தாட்சாயினி செல்ல ஈசன் அனுமதி கொடுக்கவில்லை. இருந்தும் யாகத்திற்குச் சென்ற தாட்சாயினியை மகள் என்றும் பாராமல் அவமரியாதை செய்தான் தட்சன். திரும்பிச் சென்று ஈசனை பார்க்க மனம் வராத தாட்சாயினியாக குண்டத்தில் கொழுந்து விட்டு எரியும் தீயில் வீழ்ந்து தன்னை மாய்த்துக் கொண்டாள்.  கோபமுற்ற ஈசன் வீரபத்திரரை அனுப்பி தட்சன் நடத்தும் யாகத்தை அழித்ததுடன் தட்சன் தலையைக் கொய்து அவனை தண்டித்த தலம் திருப்பறியலூர்.
கருத்தன் கடவுள் கனலேந் தியாடும்
நிருத்தன் சடைமேல் நிரம்பா மதியன்
திருத்தம் உடையார் திருப்பறி யலூரில்
விருத்தன் எனத்தகும் வீரட்டத் தானே.
- திருஞானசம்பந்தர்

கருத்துகள்