216. திருத்தலைச்சங்காடு

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில்  162ஆவது தலமும், சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 45ஆவது சிவ தலமாகும்.

இறைவன்:  சங்காரண்யேஸ்வரர், சங்கவனேஸ்வரர்.

இறைவி:  சௌந்திரநாயகி

திருமால் இறைவனைப் பூஜித்துப் பாஞ்சசன்யம்   எனும் சங்குப் பெற்றத் தலம்







நலச்சங்க வெண்குழையுந்
  தோடும்பெய்தோர் நால்வேதம்  
சொலச்சங்கை யில்லாதீர்
  சுடுகாடல்லாற் கருதாதீர்   
குலைச்செங்காய்ப் பைங்கமுகின்
  குளிர்கொள்சோலைக் குயிலாலும்`
தலைச்சங்கைக் கோயிலே
  கோயிலாகத் தாழ்ந்தீரே. 
- திருஞானசம்பந்தர்

கருத்துகள்