218. திருநனிபள்ளி (புஞ்ஜை)

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில்  160ஆவது தலமும், சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 43ஆவது சிவ தலமாகும்.

இறைவன்:  நற்றுணையப்பர்.

இறைவி:  மலையான் மடந்தை, பர்வத புத்ரி









காக வடிவில் இருந்த விநாயகர், அகத்திய முனிவரின் கமண்டலத்தை கவிழ்த்து, காவிரி நதியை தமிழ்நாட்டில் பாயச் செய்தார். கோபமடைந்த அகத்தியர், விநாயகரை என்றென்றும் காகமாக இருக்குமாறு சபித்தார். சாபத்திலிருந்து விடுபட, விநாயகர் இந்தக் கோயிலுக்கு வந்து கோயில் குளத்தில் நீராடி சிவனை வழிபட்டு தங்க நிறத்தில் (பொன் - தங்கம், சேய் - மாற்றம்) வெளியே வந்தார், எனவே இந்த இடம் பொன்செய் என்று பெயர் பெற்றது.


கடல்வரை யோதமல்கு கழிகானல் பானல் கமழ்காழி யென்று கருதப்
படுபொருள் ஆறுநாலும் உளதாக வைத்த பதியான ஞான முனிவன்
இடுபறை யொன்றை அத்தர் பியன்மேலிருந்தின் இசையால் உரைத்த பனுவல்
நடுஇருள் ஆடும் எந்தை நனிபள்ளி உள்க வினைகெடுதல் ஆணை நமதே. 
- திருஞானசம்பந்தர்

முற்றுணை ஆயி னானை மூவர்க்கும் முதல்வன் தன்னைச்
சொற்றுணை யாயினானைச் சோதியை ஆதரித்து
உற்றுணர்ந்து உருகியூறி உள்கசி வுடையார்க்கு
நற்றுணை யாவர்போலு நனிபள்ளி யடிகளாரே.
- திருநாவுக்கரசர்

ஆதியன் ஆதிரை யான்அயன் மால் அறி தற்(கு) அரிய
சோதியன் சொற்பொரு ளாய்ச்சுருங் காமறை நான்கினையும்
ஓதியன் உம்பர்தங் கோன்உல கத்தினுள் எவ்வுயிர்க்கும்
நாதியன் நம்பெரு மான்நண்ணும் ஊர்நனி பள்ளியதே. 
- சுந்தரர்

கருத்துகள்