தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் 155ஆவது தலமும், சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் 38ஆவது சிவ தலமாகும்.
இறைவன்: வேதபுரிசுவரர், அத்யாபகேசர்.
இறைவி: சௌந்தரியாம்பிகை.
ஊர்த்துவ ரதன் என்ற அரசன் தவத்திறகு மெச்சி பிரம்மா அவனுக்கு ஆகாயத்தில் பறந்து செல்லக் கூடிய ஒரு தேரைப் பரிசாக அளித்தார். அந்த தேரில் ஏறி ஒரு முறை ஊர்த்துவரதன் ஆகாயத்தில் சென்று கொண்டு இருந்த போது ஓரிடத்திற்கு மேல் தேர் முன்னே செல்ல முடியாமல் பூமியில் அழுந்தி நின்றது. ஊர்த்துவரதன் தேர் பூமியில் இறங்கி அழுந்தி நின்றதற்கு காரணம் என்ன என்று பார்த்த போது அவ்விடத்தில் அகத்திய முனிவர் இறைவனை பூஜித்து வந்ததைப் பார்த்தான். தேர் கீழே அழுந்தி நின்றதால் இத்தலம் தேரழுந்தூர் என்று பெயர் பெற்றது.
தொழுமாறுவல் லார்துயர் தீரநினைந்து எழுமாறுவல் லார்இசை பாடவிம்மி அழுமாறுவல் லார் அழுந் தைமறையோர் வழிபாடுசெய் மாமட மன்னினையே.
- திருஞானசம்பந்தர்






கருத்துகள்