215. ஆக்கூர்

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில்  163 ஆவது தலமும், சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் 46ஆவது சிவத்தலமாகும். 

இறைவன்:  தான்தோன்றியப்பர், சுயம்புநாதர்.

இறைவி:  வாள்நெடுங்கண்ணி, கட்கநேத்ரி








மன்னன் ஒருவன் இறைவன் கட்டளைப்படி தினமும் 1000 ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்ய முற்பட்டான். 48 நாட்கள் இந்த அன்னதானம் செய்ய வேண்டியிருந்தது. தினந்தோறும் 1000 இலை போட்டு உணவு பரிமாறினாலும் 999 பேர் மட்டுமே உணவருந்தினர். 47 நாட்கள் இவ்வாறு தினமும் ஒருவர் குறைவதைக் கண்ட மன்னன் மனம் வருந்தி இறைவனிடம் முறையிட்டான். 48-வது நாள் அந்தணர் உருவில் ஆயிரத்தில் ஒருவராக தானும் வந்து உணவருந்தி மன்னனுக்கு அருள் புரிந்தார். பந்தியில் தானும் ஒருவராக அமர்ந்து இறைவன் உணவருந்திய பெருமையை உடையது இத்தலம். 
அக்கிருந்த ஆரமும் ஆடரவும் ஆமையும்
தொக்கிருந்த மார்பினான் தோலுடையான் வெண்ணீற்றான்
புக்கிருந்த தொல்கோயில் பொய்யில்லா மெய்ந்நெறிக்கே
தக்கிருந்தார். ஆக்கூரின் தான்தோன்றி மாடமே.
- திருஞானசம்பந்தர்

முடித்தா மரையணிந்த மூர்த்தி போலும்
    மூவிலகுந் தாமாகி நின்றார் போலும் 
கடித்தா மரைவெய்ந்த கண்ணார் போலும் 
    கல்லலகு பாணி பயின்றார் போலும் 
கொடித்தா மரைக்காடே நாடுந் தொண்டர் 
    குற்றேவல் தாம்மகிழ்ந்த குழகர் போலும் 
அடித்தா மரைமலர்மேல் வைத்தார் போலும் 
    ஆக்கூரில் தான்தோன்றி யப்ப நாரே.
- திருநாவுக்கரசர்

கருத்துகள்